ரேபரேலி அமேதி தொகுதியில் இந்திய தகவல் தொழில் நுட்ப கல்வி நிறுவனம் அமைக்க முன் வராததது ஏன் என காங். தலைவர் சோனியா மகள் பிரியங்கா கேள்வி எழுப்பினார்.
உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தொகுதியில் இளைஞர்கள் பலர் உயர் கல்வி கற்க முடியாதது உட்பட ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
தற்போதைய இந்திய மத்திய அரசு ரேபரேலி தொகுதியில் ஐ.ஐ.ஐ.டி., அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது.
தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள ஸ்மிருத்தி இரானி இளைஞர்களி்ன் நலன் கருதி ரேபரேலி தொகுதியில் ஐ.ஐ.ஐ.டி., நிறுவனம் அமைக்க முன் வராதது ஏன்? இது குறித்து பதில் அளிக்க வேண்டும் என கூறினார்.
முன்னதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ரேபரேலி, அமேதி தொகுதிகளில் சோனியா குடும்பத்தினர் பொய்யான வாக்குறுதிகள் அளித்திருந்ததாகவும் பல ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இரு தொகுதிகளிலும் வளர்ச்சி காண்பதாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரேபரேலியில் பிரியாங்கா கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஸ்மிரித்தி இரானி பாவம் பிரியங்கா தொகுதி நிலவரத்தை தெரிந்து கொள்ளவில்லை. அமேதி தொகுதிக்குட்பட்ட அலகாபாத்தில் ஐ.ஐ.ஐ.டி., நிறுவனம் இயங்கி கொண்டு தான் உள்ளது. என கூறியுள்ளார்.(ந)
