ஆதிகால முஸ்லிம் கலாசார பாரம்பரிய கோலங்கள் சேகுமலையடி வாரத்தில் அரங்கேற்றம்!

எஸ்.எம்.சன்சீர்-

ம்பாறை மாவட்டத்தின் இலக்கிய பாரம்பரியத்தின் ஆளுமைகளின் சஞ்சரிப்பு அகர ஆயுதம் எனும் அமைப்பு மாதாமாதம் ஒன்று கூடும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இறக்காமம் பிரதேசத்தின் மதீனா புரத்தில் காணப்படும் "சேகு மலையில்" சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எல்.ஜபீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் பற்பல இலக்கிய ஆளுமைகள் தத்தமது திற்மைகளையும் ; செயற்பாடுகளையும் முன்வைத்திருந்தார்கள். இவ்வடிப்படையில் "மாப்பிள்ளை பைத்" பாடப்பட்டது குறிப்பிடப்பட்ட சிறப்பம்சமாகும்.

பலரதும் கவனத்தையும் ஈர்த்த இவ்விஸ்லாமிய மாப்பிள்ளை பைத்தினை மிக அழகாக இறக்காமம் பிரதேசத்தின் இலக்கிய முத்து கலாபூஷணம் எச்.அப்துல் சலாம் அவர்கள் பாட அதற்க்கு ஏற்றால் போல் மாப்பிள்ளை வேடத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த தேசமான்ய ஜலீல் ஜீ அழகாய் பவனி வந்து அனைவரினதும் பாராட்டினையும் கைதட்டினையும் பெற்றுக் கொண்டார்கள். 

அதனைத் தொடர்ந்து இலக்கிய வாதிகள், கலைஞர்கள், இன்னும் பலரின் சிறப்புரையும் கலை நிகழ்சியும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இந் நிகழ்வில் புகழ் பெற்ற இலக்கியவாதியான "வேதாந்தி" எனும் சேகு இஸ்ஸதீன்; சட்டத்தரணி பாறூக் சாஹிப், பிரதேச அரசியல்வாதி அமீர். மற்றும் இன்னும் பலரும் சிறப்பதிதியாகக் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -