ஞான­சா­ரவையும் மிஞ்­சி­விட்டார் மஹிந்த -சிறிதுங்க ஜயசூரிய

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த காவி அணி­யாத பிக்­கு­வா­கி­விட்­ட­மை­யினால் ஞான­சார தேர­ரையும் மிஞ்­சி­விட்டார் என ஐக்­கிய சோசலிஷ கட்­சியின் தலைவர் சிறி­துங்க ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

வித்­தி­யாவின் கொலையானது சிறு­பான்­மை­யி­னரை சில அர­சியல்வாதிகள் இன் னும் அடி­மை­க­ளா­கவே நடத்த முயற்­சித்து வரு­கின்­றனர் என்­ப­தையே எடுத்­துக்­காட்­டு­கி­றது எனவும் தெரி­வித்தார்.
வெள்ளவத்தை தமிழ்ச் சங்­கத்தில் இடம் பெற்ற வித்­தி­யா­வுக்கான மல­ரஞ்­சலி செலு த்தும் நிகழ்வில் பங்­கேற்று உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­ட­மை­யினால் நாட்டின் அனைத்து இன மக்­களும் மனம் நொந்து போயுள்­ளனர்.

ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த இதனை அர­சி­ய­லாக்­கி­விட்­டது மட்­டு­மல்­லாமல் இன­வா­தத்­தையும் தோற்­று­விக்க முயற்­சித்து வரு­கின்றார். வித்­தி­யா­வுக்கு நேர்ந்த கொடூ­ரத்­தினை சகித்துக்கொள்ள முடி­யாத கார­ணத்­தினால் யாழ். மக்கள் தமது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­ய­தா­லேயே யாழில் கல­வரம் உண்­டா­னது.

இதனை முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய காவி அணி­யாத பிக்­கு­வு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தனது அர­சியல் தேவை க்­காக மீண்டும் ஆயுத குழுக்கள் உரு­வாகப் போகி­றன என்று தெரி­வித்­துள்­ளார்.

இப்­போது அவர் விஹா­ரை­க­ளையே தனது வசிப்­பி­ட­மாக்கிக் கொண்­டுள்ளார்.அதனால் வெள்ளைச் சாரம் அணிந்த துறவியா­கவும் இனவாதத்­தினை கட்­ட­விழ்த்து விடு­வ­தனாலும் மஹிந்த ஞான­சார தேர­ரையும் மிஞ்சி விட்டார்.

இது போன்று தான் 2009 ஆம் ஆண்டு யாழ்.மக்­களின் நினை­வேந்­த­லுக்கு மஹிந்த தடை விதித்தார். அது முற்­றிலும் தவ­றான செயற்­பாடாகும்.

வீரர்கள் உரு­வா­வது மக்கள் மனங்­களில் மட்­டுமேயாகும். மாறாக நாட்டின் ஜனா­தி­பதி பரிந்­துரை செய்­கின்­ற­வரை வீர­னாக ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அதே­வேளை வடக்கின் இன­வாதம் பற்றி பேசு­கின்ற முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த, தெற்கில் அவரின் ஆத­ரவு கூட்­ட­ணிகள் கட்­ட­வி­ழ்த்து விடும் இன­வாதம் பற்றி ஒரு போதும் பேசு­வ­தில்லை.
அத்­துடன் வித்­தி­யாவின் கொலை சம்­ப­வத்தை அர­சி­ய­லாக்கும் மஹிந்த போன்ற இன­வாத அர­சி­யல்­வா­தி­களின் நோக்கம் சிறு­பான்மை இனங்­களை தொடர்ந்தும் அடி­மை­க­ளாக வைத்­தி­ருப்­பது என்­ப­தையே காண்­பிக்­கி­றது.

எவ்வாறாயினும் அரசாங்கம் வடக்கு, தெற்கின் நல்லிணக்கத்துடன் முன்செல் லும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் அத்துடன் மஹிந்த போன்ற இனவாத தரப்புக்களுக்கு இனி ஒருபோதும் தேர் தலில் போட்டியிட ஜனாதிபதி இடமளிக் கக்கூடாது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -