பேஸ்புக் பக்கத்தை வலைத்தளமாக மாற்றிக்கொள்ள முடியும் - புதிய செயலி

புதிய வலைத்தளங்களை உருவாக்கி பயன்படுத்த முடியாதவர்கள் இனிமேல் தங்கள் பேஸ்புக் பக்கத்தை வலைத்தளமாக மாற்றிக்கொள்ள வகை செய்யும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க் நகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேஜர் எனப்படும் ஆப் ஒன்றை மூன்று பொறியாளர்கள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளார்கள். இது சிறிய அளவில் தொழில் நடத்துபவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

முதலில் பேஜர் ஆப்பில் நுழையும்போது அது உங்கள் பேஸ்புக் நுழைவாயில் பகுதிக்கு செல்லும். அங்கு உங்கள் மின் அஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி பேஸ்புக் பக்கத்திற்கு செல்லும்போது அங்கு உங்களின் பல்வேறு பேஸ்புக் பக்கங்கள் வரிசையாக தோன்றும், அதில் நீங்கள் ஒன்றை தேர்வு செய்யும்போது அதில் உள்ள தகவல்கள் ஒரு புதிய வலைத்தளமாக மாறும்.

வலைத்தளமானது அறிமுகம், செய்தி, நிகழ்வுகள் மற்றும் காலரி என்ற நான்கு பகுதிகளை கொண்டதாக இருக்கும். இந்த புதிய ஆப் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. 

இது முழுமையாக பயன்பாட்டிற்கு வரும்போது சிறிய தொழில் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் பதியப்படும் தகவல்களை கொண்டு புதிய வலைத்தளத்தை உருவாக்கி பயன்பெறமுடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -