அபு அலா -
அட்டாளைச்சேனையை உள்ளடக்கிய 'ஜனாஸா நலன்புரி செயற்திட்டம்' ஆரம்ப நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) மாலை அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.அப்துல் முனாப், ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான ஏ.எல்.அனீஸ், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எம்.வாகிட், கிழக்கு மாகாண முதலமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்புச் செயலாளர் எஸ்.எல்.எம்.பழீல், அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்பர், அதிபர்களான ஏ.எல்.பாயிஸ், எம்.ஐ.எம்.சலாம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை ஜனாஸா நலன்புரி செயற்திட்டம் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்சேக் என்.ஜீ.ஏ.கமால்டீன் நிகழ்த்தி வைத்தார்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)