சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு எப்போது?
வரும் புதன்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று அவர் முதல்வராக பதவியேற்கலாம் என்று அதிமுக வட்டரங்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் போயஸ் தோட்டம் வருகை
இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இதனிடையே ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக, அதாவது அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்க அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
அதிமுகவினர் கொண்டாட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போயஸ் தோட்டம், அதிமுக தலைமை அலுவலகம், மாவட்ட அதிமுக அலுவலகங்கள் முன்னர் திரண்டுள்ள அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.(ந)
