அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலை ஊழியர்களுக்கான விளையாட்டு நிகழ்சிகள்!

எம்.ஜே.எம்.சஜீத்-
மிழ் சிங்கள புதுவருட புத்தாண்டை தொடர்ந்து அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் அக்கறைப்பற்று சமூக நலன்புரிச் சங்கத்தின் தலைவரும், ஆதார வைத்தியசாலையின் கணக்காளருமான எஸ்.எம்.கலீல் தலைமையில் அக்கறைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டி நடைபெற்றது.

கிரிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி தெரிவிக்கு ஹெல்த் ஸ்டார் கழகமும் பண் ஸ்டார் கழகமும் தெரிவு செய்யப்பட்டு வெற்றிக்கிண்த்தை 'பண் ஸ்டார்' கழகம் கைப்பற்றி கொண்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம். ஜஃபர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு வெற்றி கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக அக்கறைப்பற்று மக்கள் வங்கியின் முகாமையாளர் எஸ்.எம். இமாமுத்தின் , அக்கறைப்பற்று வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.(ந)









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -