சாய்ந்தமருது இளைஞர்களின் நீண்டகால கனவான புதிய விளையாட்டு மைதான திறப்பு விழா இன்றாகும்!

ஹாசிப் யாஸீன்-
சாய்ந்தமருது புதிய விளையாட்டு மைதானம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் 7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று (23) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இத்திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை சாய்ந்தமருது பிரதேச செயலகமும், விளையாட்டு கழக சம்மேளனமும் இணைந்து மேற்கொள்கின்றன.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இடம்பெறவுள்ள இத்திறப்பு விழா நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பணிப்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ.ஏ.பஷீர், ஏ.நஸார்தீன் உள்ளிட்ட அரசியல் பிரதமுகர்கள், உயர் அதிகாரிகள், விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இத்திறப்பு விழா நிகழ்வு மிக கோலாகலமாக இடம்பெறவுள்ளதுடன் இன்றைய தினம் சாய்ந்தமருது பிரதேச கழங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்களைக் கொண்டு ரீ-ருவெண்ரி சிநேகபூர்வ கடினபந்து கிரிக்கெட் போட்டி கரைவாகு ஹி ங்ஸ் இலவன் அணிக்கும், சாய்ந்தமருது ஸ்டார்ஸ் அணிக்குமிடையில் இடம்பெறவுள்ளதாக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம்.றஜாய் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்கள் சுனாமிக்குப் பின்னர் இழந்த விளையாட்டு மைதானம் தற்போது கரைவாகுவட்டை வொலிவேரியன் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகின்றமை ஒரு மைல்கல்லாகும்./ச/
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -