அமைச்சு பதவிகளை கைவிடுவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தால், அமைச்சு பதவியை கைவிட தான் தயாராக இருப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாக அவரை மேற்கோள்காட்டி கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைச்சரின் இதுதொடர்பாக தனது நெருங்கிய நண்பரொருவருடன் கலந்துரையாடியிருக்கின்றார்.
அதில்,ஒப்பந்தங்களை போடுவதற்காக நான் அமைச்சு பதவியை பெறவில்லை. நாட்டில் நடக்கும் அபிவிருத்திக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒத்துழைப்பை பெறவேண்டும் என்று ஜனாதிபதி எண்ணியிருப்பார். இதன் காரணமாகவே எமக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.
அமைச்சுப் பதவிகள் கிடைக்காதவர்களுக்கு மனவருத்ததும் அதிருப்தியும் இருக்கக் கூடும்.
நான் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளவில்லை. நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருக்கின்றேன்.
அமைச்சு பதவிகளை கைவிடுவது என கட்சி தீர்மானித்தால், அமைச்சு பதவிகளை கைவிட நான் தயாராகவே இருக்கின்றேன்.
பல வருடங்களாக இலங்கையை ஏறெடுத்து பார்க்காத வெளிநாடுகள் தற்போது இலங்கைக்கு வந்து உதவிகளை செய்வதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ச
