உயிருக்கு அச்சுறுத்தல் -மஹிந்த

னது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியை மேற்கோள்காட்டி முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு பிளவுபட்டுவிடாமல் யுத்தத்தை நிறைவு செய்து வலுவான அரசை அமைத்து ஆட்சி செய்த போதிலும் இதற்கு முன் எந்தவொரு ஜனாதிபதியும் சந்திக்காத வகையில் முன்னாள் ஜனாதிபதியும், அவரது குடும்பத்தினரும் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் இதற்கு முன்னர் ஒருபோதும் இதுமாதிரியான அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காக பண்டாரநாயக்கவின் சகல உரிமைகளையும் பறித்து கொண்டு அவரை கட்சியிலிருந்தும் ஒதுக்கியிருந்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியிருந்தார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து சலுகைகளும், பாதுகாப்பும் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -