ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான மாணிக்க கற்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் - பெங்கொக் நோக்கிச் செல்லவிருந்த நபரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் இடுப்பு பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 105 மாணிக்க கற்கள் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விமான நிலைய சுங்கப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.(ந)
