குற்றங்களுக்கான தண்டனைக்கு இஸ்லாமியச் சட்டத்தை நிலை நாட்டவேண்டும்- அமைச்சர் திகாம்­பரம்



லங்­கையில் பெண்கள், யுவ­திகள் மற்றும் சிறு­வர்கள் மீதான பாலியல் வன்­மு­றைகள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்ச்­சி­யாக அதி­க­ரித்­துக்­கொண்டு வரு­கின்­றமை பெரும் வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

நாடு பூரா­கவும் எல்லா சமூ­கத்­தினர் மத்­தி­யிலும் இந்த நிலை­மை­யா­னது பயத்­தையும் பீதி­யையும் ஏற்­ப­டுத்­து­வ­தா­க­வுள்­ளது. எனவே இத்­த­கைய சமூக விரோத செயல்­களை தடுக்க வேண்­டு­மானால் சவூதியில் போன்று குற்­ற­வா­ளி­க­ளுக்கு பொது இடத்தில் மரணதண்­டனை விதிக்க வேண்டும் என பெருந்­தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமை ச்­சரும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வ­ரு­மான பழனி திகாம்­பரம் தெரி­வித்­துள்ளார். அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா சிவ­லோ­க­நாதன் மீதான பாலியல் வன்­மு­றை­யா­னது நாட்டில் பாரிய அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அண்­மைக்­கா­ல­மாக இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தொடர் பாலியல் வன்­மு­றை­க­ளுடன் கூடிய கொலை­களும் இடம்­பெற்று வந்­தமை அங்கு பெரும் பீதியை உரு­வாக்­கி­யது. அதேபோல் வட­மா­க­ாணத்­திலும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வரும் பாலியல் வன்­மு­றை­க­ளுடன் கூடிய கொலைகள் அங்கு வாழும் மக்­க­ளி­டத்தில் ஒரு­வித பயத்­தி­னையும் பீதி­யையும் தோற்­று­வித்­துள்­ளது. உற­வி­னர்­க­ளாலும் அய­ல­வர்­க­ளாலும் இந்த வன்­முறை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­னது சமூக சீர­ழிவை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் சமூக வாழ்வு சீர்­கு­லை­க்கப்­ப­டு­வ­தா­கவும் உள்­ளது.

வித்தியா படு­கொலை நடந்து பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் நடந்­து­கொண்­டி­ருக்கும் வேளை கிளி­நொச்­சி­யிலும், ஊறணி­யிலும் சிறு­மிகள் மீதான பாலியல் வன்­முறை இடம்­பெற்­றி­ருப்­பது மேலும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே உள்ளது. இந்த நிலைமைகளை தொடர்ச்சியாக அனுமதித்துக்கொண்டிருக்க முடியாது. இதற்கான தண்டனைகள் அதி கரிக்கப்படுவதுடன் சவூதியில் போன்று பொது இடத்தில் மரணதண்டனை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
(வீரகேசரி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -