ந.குகதர்சன்-
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைப் பிரதேசமான மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர், பிரதித் தவிசாளர், சபை உறுப்பினர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மஞ்சந்தொடுவாய் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமையில் சன்சமுக கட்டடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், சபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர். அத்தோடு வீதி மின் விளக்கு அமைத்தல், பிரதேச கோயில்கள் புனரமைப்பு, வீதி புனரமைப்பு பற்றியும் மக்களால் பிரதி நிதிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதன்போது பிள்ளையார் ஆலயம், கண்ணகியம்மன் ஆலயம், வீரபத்திரர் ஆலயம் என்பற்றையும் பார்வையிட்டனர்.





