தாய் மற்றும் சேய் போசாக்கு உணவு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு!

எம்.ஜே.எம். முஜாஹித்-
நாம் எப்போதும் எமக்குத் தேவையான உணவு வகைகளை உண்பவதற்று பழகிக்கொள்ள வேண்டும் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதன் மூலம் நாம் சிறந்த சுகதேகிகளாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மற்றவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடியவர்களாக ஆகிவிடுவோம். அத்துடன் அரசின் இலக்கை அடைவதற்கும் நாட்டில் சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

ஆரோக்கியமான சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கு சுகாதார அமைச்சினால் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.

தேசிய உணவு போசாக்கு மாதத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தாய் மற்றும் சேய் போசாக்கு உணவு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற போது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். அலாவுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் டாக்டர் ஜலால்தீன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம். பாயிஸ், சுகாதார மருத்துவ தாதிகள், தாய் சேய் மருத்துவ அதிகாரிகள் உட்பட குடும்பத்தலைவிகளும் கலந்து கெண்டனர்.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -