ஊடகவியலாளா்களுக்கு வீடுகளை நிர்மாணித்து வழங்க ஊடக அமைச்சு நடவடிக்கை!

அஸ்ரப் ஏ சமத்-
லங்கை ஒலிபரப்புக் கூட்டுததாபனத்திற்கு சொந்தமான கோமகமவில் உள்ள காணியில் 1500-2000 வீடுகளை நிர்மாணித்து ஊடகவியலாளா்களுக்கு சலுகை அடிப்படையில் வழங்குவதற்கு ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

நேற்று ஊடக அமைச்சா் ஜயந்த கருநா திலக்க அமைச்சின் செயலாளா் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவா் அதிகாரிகள் இக் காணியை பாா்வையிட்டதுடன் இக் காணியில் வீடுகளை நிர்மாணிப்பதற்கும் பாா்வையிட்டாா்கள்.

இவ் வீடுகள் கொழும்பில் ஊடக நிறுவனங்களில் கடமை புரிகின்றவா்கள் வாடகை வீடுகளில் வாழுகின்ற ஊடகவியாளா்களுக்கு வழங்கப்படும். இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியினதும் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. கடந்த ஜனாதிபதித் தோ்தலின்போது ஊடகவியலாளா்களுக்கு கொழும்பு மாவட்டத்தில் கோமகவில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என அறிவிருத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -