ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர்ப் பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிச் செயலமர்வு (25.05.2015) அன்று நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நீதியமைச்சின் மத்தியஸ்த சபை இணைப்பாளர் ஜசபால டீ சில்வா தலைமையில் இடம் பெறும் இப்பயிற்சிச் செயலமர்வில் ஆர்.ஜோன் பிலிப், எம்.ஏ.அப்துல் கப்பார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு, 'மத்தியஸ்தம் செய்யும் திறன்கள், மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய பயிற்சிகளை மிகச் சிறப்பாக வழங்கினர்.
பழைய, புதிய உறுப்பினர்கள் அனைவரும் மிக விருப்புடனும், சுறுசுறுப்புடனும் இப்பயிற்சி நெறிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.(ந)






