மக்காவுக்கு அருகாமையிலுள்ள அஞ்சும் ஹோடலில் மதீனா பல்களைகழகத்தின் முதுமாணி மாணவன் மௌலவி இப்பாம் தலைமையில் சவூதி அராபிய அரசாங்கத்தின் இஸ்லாமிய விவகார அமைச்சின் ஆலோசகர் டாக்டர் கலாநிதி அஷ்ஷேஹ் காலித் அஸ்கரி அவர்களுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் இலங்கை முஸ்லிம்களின் அபிவிருத்தி தொடர்பாகவும், கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதார உதவி தொடர்பாகவும் பேசபட்டதுடன் விசேடமாக மியன்மாரின் மத வெறியர்களால் இடம்பெற்று வரும் கொலைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
இது தொடர்பாக பதிலளிக்கையில் மியன்மார் அரசாங்கத்தோடு பேச முற்பட்டபோது எந்தவித தொடர்பும் கிடைக்கவில்லை என்றும் மாறாக அயல் நாடான இந்தோனேசியா பிலிப்பின்ஸ் போன்ற நாடுகளின் உதவியை பெற்று மியன்மார் அரசாங்கத்துடன் பேச முற்பட்டபோது எந்தவித அக்கறையும் மியன்மார் அரசு காட்டவில்லை என்றும் தமது புதிய மன்னர் சல்மானின் வருகையின் பிற்பாடு முஸ்லிம்களின் சர்வதேச விடயங்களில் தலை இட்டு வருவதாகவும் முதல் நடவடிக்கையாக எமன் நாட்டின் விடயங்களில் உதவி செய்து வருவதாகவும் கூறியதுடன் தொடர்ந்தும் தாம் அதுதொடர்பாக முழு முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினார்.


