Qatar Charity யின் இலங்கைக்கான பணிப்பாளருடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் சினேகபூர்வ சந்திப்பு!!!



ம்பாறை மாவட்ட பிரதேச மக்களின் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குரிய தீர்வுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக Qatar Charity யின் இலங்கைக்கான பணிப்பாளருடன் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் இன்று (19.12.2025) வெள்ளிக்கிழமை கொழும்பில் சினேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

இதன் போது தொடர்ச்சியாக அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் EHED வீட்டுத் திட்டத்திற்கான தீர்வு, நிந்தவூர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் பிரதான வீதியில் காணப்படும் வைத்தியசாலையின் கட்டுமானம், பிராந்தியத்திற்கான ஒருங்கிணைந்த திண்மக் கழிவு முகாமைத்துவம், வீடற்றவர்களுக்கான வீட்டுத்திட்டம் அத்துடன் சமகால அனர்த்தத்தை முகங்கொடுத்தல் வழிமுறைகள் சம்மந்தமாகவும் மேலும் கல்முனை மாநகர சபையை பௌதிகரீதியில் வலுவூட்டல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :