சூர்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வந்த படம் மாஸ். முதலில் மாஸ் என்று படத்திற்கு பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை குழு சான்றிதழ் பெற்ற பிறகு சில காரணங்களால் படத்தின் பெயர் மாஸ் என்கிற மாசிலாமணியாக மாறி இருந்தது. அதன்பிறகு மாஸு என்கிற மாசிலாமணி என மாற்றினார்கள்.
நேற்று வரை மாஸு என்கிற எழுத்தைப் போட்டு விளம்பரம் செய்து வந்தவர்கள் இன்றிலிருந்து அதையும் மாசு என்று மாற்றிவிட்டார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் படத்தின் பெயரை மாற்றி வருவதனால் படக்குழுவினர் ஏன் இவ்வளவு குழப்பத்தில் உள்ளனர் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
