ஹாசிப் யாஸீன்-
புங்குடுதீவு மாணவி வித்யா வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அம்பாறை மாவட்ட காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று (27) காரைதீவு பிரதேச செயலக முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மாணவர்கள் ' அரசே மாணவர்களின் உரிமையை பாதுகாறு, குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கு' போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பாடசாலை மாணவர்களினால் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. /ச/


