அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகு ஏற்றுமதியில் இலங்கை முந்துகின்றது!

லங்கையின் ஏற்றுமதி வருவாயினை பெற்றுத்தருவதில் படகு உற்பத்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தெற்காசியாவிலேயே மிகப் பெரிய சர்வதேச தரத்திலான படகுகளை வடிவமைத்து ஏற்றுமதி செய்யும் நாடாகவும் இலங்கை கருதப்படுகின்றது என்று கூறிக்கொள்வதில் நான் பெருமைபடுகின்றேன் அத்துடன் அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகு ஏற்றுமதியிலும் இலங்கை முந்துகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகுகளினை இந்தியா கடல் படையினருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு தயாராக இருந்த படகுகளினை பார்வையிடுவதற்கு நேற்று (22) காலை ஹெந்தலை எலக்கந்தையில அமைந்துள்ள Solas Marine Lanka (Pvt) Ltd நிறுவனதின் படகு கட்டும் தளத்திற்கு ஸ்தல விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த வேளையே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்ககையில்; 

புதிய அரசின் தொழில்வளர்ச்சியானது மக்களின் வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ள நிலையில் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதாகவும் அமைகின்றது. இலங்கையில் தற்போது வளர்ச்சிப்பாதையில் காணப்படும் படகு தயாரிப்பானது சர்வதேச சந்தையில் அதிக கிராக்கியை ஏற்படுத்தியள்ளது. அதி உச்ச நவீன தொழில்நுட்கங்களை பயன்படுத்தி இந்த படகுகளை வடிவமைத்தல், படகுத் துறை சார்ந்த நவீன தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்களில் முன்னணியில் காணப்படும் ஒரேயொரு நிறுவனம் Solas Marine Lanka (Pvt) Ltd ஆகும். கடல் பாதூப்பு அபிவிருத்திக்கு கடல் பாதுகாப்பு ரோந்து படகுகள் பயனுள்ளதாக அமைகின்றது. பிராந்திய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், மொரீஷியஸ், மடகாஸ்கர், மாலைதீவு ஆகிய நாடுகள் அனைத்தும் படகுத் துறையிலும், கடற் போக்குவரத்திலும், விரிவான அனுபவத்தையும், வழங்களையும் கொண்டுள்ள நாடுகளாகும். எனினும் இவற்றில் சில நாடுகள் இலங்கையில் தயாரிக்கப்படும் இப்படகுகள் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புள்ளி விபரத்தின் படி 2014 ஆம் ஆண்டு படகு கட்டுமானத்திற்கான ஏற்றுமதி 86.25 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் மட்டும் இதன் ஏற்றுமதி 29.04 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.

Solas Marine Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பொது முகாமையாளர் எஸ்.டி. பிரேமதிலக்க கருத்து தெரிவிக்கையில்;

Solas Marine Lanka (Pvt.) Ltd நிறுவனம் 2008 ஆம் ஆண்டு இலங்கை கம்பனிச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ப்பட்ட ஒரு நிறுவனம். அன்று தொடக்கம் இன்றுவரை கரையோர கடல் பாதுகாப்பு ரோந்து படகுகளை; வடிவமைத்து வருகின்றோம். 2012 ஆம் ஆண்டு தொடக்கம் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிவேக ரோந்து படகுகளினை ((Fast Inceptor Board -FIB) வடிவமைத்து வருகின்றோம். இவ் ரக அதிவேக கடல் பாதுகாப்பு ரோந்து படகுகளினை ஆசிய நாடுகள் உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகம் செய்வதற்கு எமது எதிர்கால இலக்காக உள்ளது. மேலும் படகு கட்டுதல், மோட்டோர் பொறியியல் ,பழுது பார்த்தல், உள்ளக வடிவமைப்பு, படகு பயண பாதுகாப்பு உபகரணங்கள்,இலத்திரனியல் சாதனங்கள்,படகு துறையின் முதலீடு, படகு ஏற்றுமதி, மாலுமிகளின் பயிற்சி,போன்ற துறைகளை உள்ளடக்கியதாக எமது நிறுவனத்தின் நடவடிக்கையாக காணப்படுகின்றது. கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிவேக ரோந்து படகுகளினை இந்தியா, பங்களாதேஷ், மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ப்படுகின்றது. இலங்கையில் தற்போது வளர்ச்சிப்பாதை காணப்படும் படகு தயாரிப்பு 2020 ஆம் ஆண்டளவில் உலகளவில் ஏற்றுமதியில் முதலிடத்தைப் பிடிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாம் இந்திய கடற்படையினர் உட்பட இலங்கை கடற்படை, விமானப்படை, இராணுவ மற்றும் பொலிஸாருக்கு இப்படகுகள் விநியோகித்து வருகின்றோம். இதேவேளை பிரேசில் மொரீஸியஸ், நைஐPரியா,பிரேசில், சவுதி அராபியா குவைத் கென்னியா ஓமான் ஆகிய நாடுகளுடன் எமது விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றோம்.

சவுதிஅரேபியா, ஐக்கியஅரபுஎமிரேட்ஸ், சாலமன் தீவு, பிலிப்பைன்ஸ், ஹாலந்து,மாலத்தீவு தீவு, வியட்நாம், மொரிஷியஸ் , புவா நியூ கினி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் இது போன்ற நாடுகளின் சந்தைகளில்;; இப்படகுகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளது.

கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிவேக படகுகளின் இந்தியாவுக்கான விண்ணப்ப கோரல் 80 இருந்தது. இதற்கான கோரல் 2012 ஆம் ஆணடு; விடுவிக்கப்பட்டது. இரண்டு வருடங்களில் பெற்றுக் கொடுப்பதற்கான முதலீட்டுச்சபையினுடனான திட்டம் கொண்டுவரப்பட்டது.

எனினும் இதுவரை தொகுதி தொகுதியாக விநியோகம் செய்ப்பட்டது.தற்போது தயார்நிலையில் இருக்கின்ற நான்கு படகுகளும் 11 ஆவது தொகுதியாகும் இதுவரை 40 படகுகள் விநியாகம் செய்துவிட்டோம். இப்படகு16 மீற்றர் நீளமும் 3.5 அகலமும் கொண்டது.தலா ஒரு படகின் பெறுமதி 2 மில்லியன் அமெரிக்க டொலராகும். இப்படகுகளின் வருடாந்த பராமரிப்புக்களை இந்தியா நிபுணர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நான்கு படகுகளினையும் செய்து முடித்ததற்கான கால எல்லை 60 நாட்கள். எதிர்வரும் காலங்களில் 45 நாட்களில் 4 படகுகள் கட்டி முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

ஹெந்தலை எலக்கந்தை காமெல் மாவத்தையில் அமைந்துள்ள Solas Marine Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் படகு கட்டும் தளம் அதி உச்ச நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ; உரிய பட்டறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது.இதில் தகுதி மற்றும் அனுபவம் உடைய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் 60 தொழில் நுட்ப வல்லுநர்கள் பணிகளில் ஈடுபடுகின்றனர். அத்துடன் இவர்களின் தயாரிப்பக்கள் தர உறுதி திணைக்களத்தினர் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உதவியுடன் உயர் ஸ்தானிகராலயம் ஊடாக படகு ஏற்றுமதிக்கான உதவிகளை ஏற்படுத்தி கொடுக்க கேட்டுக்கொள்கின்றோம் என்றார் பொது முகாமையாளர் எஸ்.டி. பிரேமதிலக்க.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -