வாகரை ஊரியன்கட்டு பகுதிக்கு சீனித்தம்பி யோகேஸ்வரன் பா.உ விஜயம்!

ந.குகதர்சன்-
வாகரை ஊரியன்கட்டு பகுதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டு பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஊரியன்கட்டு கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.கமலேஸ்வரன் தலைமையில் பொதுக் கட்டடத்தில் நடைபெற்ற போது பிரதேசத்திலுள்ள அமைப்பின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பிரதேசத்தின் அபிவிருத்தி, சுனாமி திட்டத்தின் மூலம் மக்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தால் வழங்கப்பட்ட பதின்மூன்று இலட்சத்தி எழுபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான வீடு தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால் அதனை திருத்தி தருமாறும், 50 வீட்டுத் திட்டம் மற்றும் 53 வீடுகள் முற்றுமுழுதாக முடியாத நிலை உட்பட்ட வீடுகளின் குறைபாடுகள் சார்பாக மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

அத்தோடு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும், மீன்பிடித் திணைக்களத்தினால் மீனவர்களுக்கு வழங்கப்பட்ட உபகரணங்களில் சில மீனவர்களுக்கு வழங்கப்படாமை, காவேரி குளம் புனரமைப்பு, மதமாற்றப் பிரச்சனைகள், வடிகால் புனரமைப்பு உட்பட பல பிரச்சனைகள் பற்றி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.

மேலும் தற்போது தேர்தல் வருவதால் இப்பகுதியில் எப்போதும் எச்சேவையும் வழங்காத சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும், தமிழரசுக் கட்சியை குறை கூறி காரியாலயங்களை நிறுவி மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாக பொது மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டனர்.

வாகரையில் மக்களின் காணியில் பாதுகாப்பு பிரிவினர் முகாம் அமைத்து உள்ளனர். அவர்களை வெளியேற்றி அக்காணியை மீண்டும் தங்களுக்கு பெற்றுத் தருமாறும் பாராளுமன்ற உறுப்பினரிடம் காணிக்குரிய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுதொடர்பாக அனைத்து விடயங்களையும் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் உடனடியாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் உத்தியோகத்தருடன் வீடு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றமை தொடர்பாக கலந்துரையாடி உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

மேலும் மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளருடன் தொலைபேசி மூலம் சில மீனவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள உபகரணங்களை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், இதற்கான உபகரணங்களை விரைவில் வழங்குவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் கூறியதாகவும் மீனவர்களிடம்; பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு ஏனைய வீட்டு விடயங்கள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதுடன், நீர்பாசன அமைச்சுடன் காவேரி குளத்தை விரைவாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டினார்.

வாகரைப் பிரதேசத்தை முன்னாள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமிழ் அரசியல் வாதிகள் தங்களது சுயநலனுக்கு ஆதிவாசிப் பகுதியாக பிரகடனப்படுத்தி பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டையில் ஆதிவாசி என்பதை உறுதிப்படுத்த எடுத்த நடவடிக்கையை நிறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனை மக்கள் பாராட்டினர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -