நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் மண்டூர் 1 ஆம் பிரிவில் வசிக்கும் சச்சிதானந்தம் மதிதயன் (43வயது) தான் சுகவீனம் உற்று சத்திரசிகிச்சை மேற்கொண்டு சுகவீன விடுமுறையில் தனது வீட்டில் அவர் இருந்த போது அவரைச் சந்திக்க வருபவர்கள் போன்று இருவர் மோட்டார் சைக்கிலில் வந்து அவருடன் உரையாடுவது போல் நடித்து அவரை திடிரென சுட்டுவிட்டுடு தப்பிச் சென்றுள்ளனர்,
படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும்போது மரணமடைந்துள்ளார்
இதுதொடர்பான மேலதிக விசாரணையினை வெல்லாவெளிப் பொலிஸ் பொறுப்பதிகாரி ரசிக சம்பத் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகின்றனர் .
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் அரச அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப் பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளமை குறிப்பிடத் தக்கது .

