ஏஎம் றிகாஸ்-
ஏறாவூர் - மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் இடம் பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஏறாவூர் - அலிகார் தேசிய பாடசாலையின் தரம் 9 ஆம் வகுப்பைச் சேர்ந்த எம்பிஎம் அக்ரம் என்ற 14 வயதுடைய மாணவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பொலன்னறுவை டிப்போவிற்க்குச் சொந்தமான பஸ் வண்டியே இம் மாணவனை மோதியுள்ளது.
மாலைநேர பிரத்தியேக வகுப்புக்காக துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் பிரதான வீதியை கடக்க முற்பட்டவேலையிலே இச்சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.


