ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
கிண்ணியா பைசல்நகர் பொது விளையாட்டு மைதானத்தின் எம்.எஸ்.தௌபீக் அரங்கு திறப்புவிழா வைபவமும் கிரிக்கட் சுற்றுப்போட்டியும் நேற்று 04 திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக்கின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அரங்கினை திறந்து வைத்ததோடு,விளையாட்டுகழகங்களின் பாவனைக்காக அரங்கை இளைஞர்களிடம் கையளித்தார்.
அரையிறுதி ஆட்டத்தில் கிண்ணியா நுராணியா விளையாட்டுக் கழகமும்,அல் அக்ஷரப் விளையாட்டுக் கழகமும் பலப் பரீட்சை நடாத்தி நுராணியா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
இந்நிகழ்வில் கிண்ணியா நகர சபை எதிர்க்கட்சி தலைவர் எம்.ரீ.எம்.ஹாரீஸ், கிண்ணியா பிரதேச சபையின் உதவிதவிசாளரும், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான கே.எம்.நிஹார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)