ந.குகதர்சன்-
மட்டக்களப்பு சித்தாண்டி பொது நூலக சுற்று மதில் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்வுகள் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டதுடன், கிராம பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.
சித்தாண்டி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் பூஜைகள் இடம்பெற்று அதிதிகள் மலர் மாலை அணிவித்து அழைத்துவரப்பட்டு பொது நூலக சுற்றுமதில் அதிதிகளால் திறந்து வைக்கப்படடதுடன், நுலகத்தில் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், சிறப்புரைகள் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரத்தினால் கடந்த வருட வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






