அபு அலா, ஏ.எல்.எம்.நபார்டீன் -
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையை தெற்காசியாவில் முதல்தர சுகாதார வைத்திய நிலையமாக மாற்றுவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருட காலத்துக்குள் வெளி நோயாளர் பிரிவில் 24775 பேரும், நடமாடும் வைத்திய சேவையில் 11100 பேரும், தொற்றா நோய் பிரிவில் 3785 பேரும், தங்கி சிகிச்சை பெற்றவர்கள் 2240 பேரும் இவ்வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
அது மாத்திரமல்லாமல், அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளி மாவட்டங்கள், பிரதேசங்களில் இருந்து வரும் நோயாளிகளை தாமதப்படுத்தால் அவர்களுக்கான வைத்திய சேவையை மிகக் குறுகிய நேரத்தில் வழங்கி வைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டும் வருவகின்றது.
எதிர்காலத்தில் அதிகூடிய முதல்தர வைத்திய சேவைகள் வழங்கும் இவ்வைத்தியசாலையாகவும், உற்பத்தித்திறன் சான்றிதழ் பெறுவதற்கான முதல் நிலை பெற்ற வைத்தியசாலையாகவும் மாற்றியமைக்கும் முழு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அட்டாளைச்சேனை ஆதார ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் மேலும் தெரிவித்தார்.
