ஏறாவூர் - மிச்நகர் பிரதேசத்தில் முன்மாதிரியாக மேற்கொள்ளப்பட்ட தோட்டம் திறப்பு விழா!

ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-

ரசாங்கத்தின் மானிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் ஏறாவூர் - மிச்நகர் பிரதேசத்தில் முன்மாதிரியாக மேற்கொள்ளப்பட்ட தோட்டம் திறப்பு விழா மற்றும் காய்கறி அறுவடையும் உத்தியோகபூர்வமாக நடைபெற்றன.

முழுமையாக இயற்கைப் பசளைகளைப் பயன்படுத்தி நகர புறங்களில் மரக்கறி வகைகளை உற்பத்திசெய்யும் திட்டத்தின் பிரகாரம் முன்மாதிரியாக் செய்யப்பட்ட இத்தோட்டத்தில் சிறப்பான அறுவடை கிடைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர்ஆர்.கோகுலதாசன், உதவிப்பணிப்பாளர் ஜி.லிங்கேஸ்வரராஜா மற்றும் பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதேச விவசாய போதனாசிரியர் எம்எச் முர்ஷிதா ஷிரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இங்கு தக்காளி, பீர்க்கு, பாகல், புடோல், கத்தரி, மிளகாய் கறிமிளகாய் போன்ற காய்கறி வகைகளுடன் சோளன் முதலான தானியப்பயிர்களும் செய்கைபண்ணப்பட்டுள்ளன.

இரசாயனப் பாவனையைக் குறைப்;பதன்மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் அரசாங்கம் இத்திட்டத்திற்கு முக்கியத்துவமளித்துவருகிறது.ச


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -