ஏ.எஸ்.எம்.ஜாவித்-
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள், அதனோடு தொடர்புபட்ட மேற்கொள்ளப்படும் கொலைகள் என்பனவற்றுடன் அன்மையில் பாலியல் வன்புனர்வு செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நீதி வேண்டியும் அச்செயல்களை கண்டிக்கும் வகையில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கெதிராக ஒன்றினைவோம் என்ற தொணிப்பொருளில் கொழும்பு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்த கண்டன எதிர்ப்புப் நடவடிக்கை ஒன்று கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் உருவச்சிலைக்கருகில் இன்று (29) மாலை இடம் பெற்றது.
நூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்குபற்றிய கண்டன நிகழ்வில் மாணவர்கள் வாயை கறுப்புத் துணிகளால் கண்டியும், மெழுகுவர்த்தி கொழுத்தி அதனை ஏந்தி பாலியல் வன்புனர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளுடன் தமது கண்டன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.ச