நற்பிட்டிமுனை விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு மாநகர முதல்வர் விசேட திட்டம்!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ற்பிட்டிமுனை அபிவிருத்திக் குழுவினர், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து அப்பிரதேசத்தின் பல்வேறு தேவைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இச்சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கல்முனை மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.சாலிதீன், எம்.எச்.எச்.ஏ.நபார், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம்.தௌபீக், ஏ.எல்.ரவூப்தீன், முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.கபூர் ஆகியோருடன் நற்பிட்டிமுனை பெரிய பள்ளிவாசல் பிரதிநிதிகள் உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி, நற்பிட்டிமுனை பொதுச் சந்தையை முழுமையாக இயங்கச் செய்தல், விலங்கறுமனை போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு இம்மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒக்டோபர் வரையான ஆறு மாதங்களுக்கு இம்மைதானத்தை கல்முனை மாநகர சபை பொறுப்பேற்று 40 இலட்சம் ரூபா செலவில் மைதானத்தை நிரப்பும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது.

இத்திட்டத்தை மேற்பார்வை செய்வதற்காக விசேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் இன்னும் ஒரு சில தினங்களில் இவ்வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என முதல்வர் நிஸாம் காரியப்பர், நற்பிட்டிமுனை அபிவிருத்திக் குழுவினரிடம் உறுதியளித்தார்.றி




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -