எஸ்.எம்.அஜூஹான்-
அம்பாரை மாவட்ட விளையாட்டுப் போட்டியின் ஒரு அங்கமான குழுநிலைப் போட்டிகளின் பெண்களுக்கான எல்லே போட்டிகள் நேற்று திங்கட்கிழமை பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்கைளையும் சேர்ந்த அணிகள் பங்குபற்றியது. இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணியும், அக்கரைப்பற்று பிரதேச செயலக அணியும் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டது.
இதில் முதலில் பெட் செய்த அக்கரைப்பற்று அணி ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு பெட் செய்த அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி இரண்டு ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.
வெற்றி பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி மாகாணப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேச செயலக அணி சார்பாக பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகம் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)