புல்மோட்டைப் பிரதேசத்திற்குச் சென்ற ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை காணவில்லை!

ந.குகதர்சன்-
ட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இருவர் செவ்வாய்கிழமை அதிகாலை 04 மணியளவில் தொழில் நிமித்தம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்திற்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவர்களின் தொடர்பு எதுவும் கிடைக்காமல் அவர்களது குடும்பத்தினர் பதற்ற நிலையில் உள்ளனர்.

ஓட்டமாவடி 02ஆம் வட்டாரம் பி.எஸ் வீதியைச் சேர்ந்த சஹாப்தீன் நாசர் மற்றும் இஸ்மாலெப்பை ஆதம்பாவா ஆகியோரே அதிகாலை படகின் இயந்திரம் கொள்முதல் செய்வதற்காக பணத்துடன் சென்ற இருவரது கையடக்கத் தொலைபேசிகளும் மதியம் வரை வேலை செய்த போதும் அவர்களிடம் இருந்து பதில் கிடைக்காத நிலையில் பிற்பகல் தொடக்கம் தொலைபேசியும் நிறுத்தப்பட்டுள்ளதாக காணமால் போனவர்களது உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவர்கள் TVS EP - AAS -7539 இலக்க நீல நிற முச்சக்கர வண்டியில் சென்றதாகவும் வழமையாக இந்த வியாபாரத்தில் இவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் காணாமல் போனவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது மாவடிச்சேனை ஜூம்ஆ பள்ளிவாயல் செயலாளர் எம்.எம்.அமீரினது கையடக்கத் தொலைபேசி இலக்கமான 0778700005, 0773574075 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -