நிஸ்மி-
சூழலைப் பாதுகாத்து பசுமைப் புரட்சி செய்வோம் என்ற தொனிப் பொருளில் அக்கரைப்பற்று பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அதாஉல்லா விளையாட்டு மைதானத்தைச் சுற்றி நூறு மரக் கன்றுகளை நடும் மரநடுகை வைபவம் கடந்த சனிக்கிழமை (02) தவிசாளர் எம்.ஏ.றாஸீக் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்கள் கலந்து கொண்டதோடு, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் ஸக்கி அவர்கள் மரக் கன்று ஒன்றினை நட்டு வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அக்கரைப்பற்று உலமா சபையின் உப தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.அஷ்ரப் அவர்களும் மரக் கன்று ஒன்றினை நட்டபின் துஆப் பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து தவிசாளர் எம்.ஏ.றாஸீக், மாநகர சபை உறுப்பினர்களான என்.எம்.நஜுமுதீன், கே.எல்.எம்.ஸறூக், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளித் தலைவர் எச்.எல்.எம்.அபூபக்கர் மற்றும் உத்தியோகத்தர்கள் மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.
அதாஉல்லா விளையாட்டு மைதானத்தைச் சுற்றி நூறு மரக் கன்றுகள் நடப்பட்டதோடு பாதுகாப்பு கூடுகளும் அமைக்கப்பட்டன.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)