ஜுனைட்.எம்.பஹ்த்-
ஷஃபான் மாதத்திற்கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு 19ம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
இம்மாநாட்டில் உலமாக்கள், கதீப்மார் ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், ஷரீஆகவுன்ஸில் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
எனவே நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6.20 மணி முதல் ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறையினை பார்க்குமாறும் அதேநேரம் பிறையைக் கண்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரிலோ அல்லது 0115234044, 0112432110, 0777316415 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
