இன்றைய சூழலில் இன-மத வேறுபாட்டினை மறந்து ஒன்றுபட்டு நிறுவன றீதியாக செயற்பாட்டில் களம் இறங்கினால் பற்பல சலுகைகளையும் ; உரிமைகளையும் வென்றெடுக முடியும் என அண்மையில் சம்மாந்துறையில் இடம் பெற்ற அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வில் விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட இறக்காமம் மறுமலர்ச்சி பவுண்டேசனின் கௌரவத் தலைவர் ; சட்டத்தரணி எம்.ஐ.எம்.றஷீட் தெரிவித்தார்.
மாவட்ட புகழ் பூர்த்த எழுத்தாளர்கள் சங்கமிப்பு .மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அம்பாறை மாவட்ட மட்டத்தில் ஒரு நிறுவனமயமான எழுத்தாளர் சங்கம் நிறுவப்படாத சூழலில் 2015.05.16 சனிக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மொழி சார்ந்த அனைத்துப் பிரதேசங்களினையும் உள்ளடக்கியதாக "அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை" எனும் அமைப்பு -வரலாற்று ஆய்வாளர், தேசமான்ய. ஜலீல் ஜீ தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அம்பாறை மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலாளர்கள் சார்பாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் அவர்களும் கௌரவ விருந்தினராக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களும் சிறப்பு விருந்தினராக இறக்காமம் மறுமலர்ச்சி பவுண்டேசனின் தலைவர், சட்டத்தரணி .எம்.ஐ.எம்.றாஷிக் மற்றும் சம்மாந்துறை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி .டீ.எம்.ஜே.கே.தஹனக கலந்து கொண்டனர்.
அங்குரார்ப்பண நிகழ்வில் நூற்றுக்கணக்கான அம்பாறை மாவட்ட தமிழ் மொழி எழுத்தாளர்களும் விசேட விருந்தினர்களாக அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கினைப்பு உத்தியோகத்தர் .தேசகீர்த்தி, ஏ.எல்.தௌபீக்; மாவட்ட செயலக -முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார உதவியாளர் அல்-ஹாஜ்.ஏ.சுபைதீன் மௌலவி மற்றும் மாவட்ட செயலக -இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் .ந.பிரதாப் இவர்களுடன் நிகழ்வின் அனுசரணையாளர்களக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர் அமைப்பாளர் ஏ.ஸீ.எம். சஹீல் ,ஈஸ்டன் ஜுவலரி உரிமையாளர், கலாநிதி அல்-ஹாஜ்.இஸட்.ஏ.பஸீர் ஆகியேருடன் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தமிழ் மொழி சார்ந்த கலாசார உத்தியோகத்தர்களும் அதிதிகளாக இன்னும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

.jpg)
.jpg)
.jpg)
