தேர்தல் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யாத வாக்காளர்களை உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தம்!

அஸ்ரப் ஏ சமத்-
2014ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பில் பெயர்களை பதிவு செய்யத் தவறிய வாக்காளர்களை மீண்டும் தேர்தல் இடாப்பில் உள்வாங்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அ.இ.ம.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத்பதியுத்தீனீன் வேண்டுகோழுக்கிணங்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதற்கான நடவடிக்கையை மேற்கெண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீதியமைசசர் ராஜபக்சவை அமைச்சர் றிசாத்பதியுத்தீன் சந்தித்து இந்த விடயத்தை சுட்டிக்காட்டியதுடன் இது தொடர்பான அவசர நடவடிக்கை எடுக்குமாறு கோறியிருந்தார்.

அமைச்சர் றிசாத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட நீதியமைச்சர் ராஜபக்ச இந்த விடயத்தை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார். இச்சந்திப்பின் தொடர்ச்சியாக இன்று காலை (18) நீதியமைச்சில் நீதியமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் கொண்ட கூட்டமெனறமும்; அமைச்சர் றிசாத் தலைமையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. 

இது தொடர்பான திருத்தும் சட்டத்தின் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டு முடிபும் செய்யப்பட்டது. இச் சந்திப்பில் அ.இ.ம.காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ. ஹமீட், பிரச்சார செயலாளர் சுபைதீன் ஹாஜியாரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -