வெல்லப்போவது அமைச்சர் ரவுப் ஹக்கீமா? அல்லது தயா கமகேவா? - முடிவு 07ஆம் திகதி!

எஸ்.எம்.அஜூஹான்-
மைத்திரி அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பாரிய அநியாயம் நடப்பதாகக் கூறப்படுகின்றது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வருவதற்கு மிக முக்கிய காரணியாக முஸ்லிம் மக்களே திகழ்கின்றனர். இந்நாட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களுமே அணி திரண்டு வாக்களித்தனர். இவ்வாறான நிலையில் தேசிய ரிதியாகவும், பிராந்திய ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயத்தை செய்வதற்கு சில அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் முன்வந்துள்ளனர்.

பள்ளிவாசல் உடைப்புக்கான தீர்மானங்கள், நியமனங்களில் பாரபட்சம், நூறுநாள் வேலைத்திட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமை, காணிப்பகிர்ந்தளிப்பில் உள்வாங்காமை, அபிவிருத்திக் குழுத்தலைவர் பதவியை வழங்காமல் இழுத்தடிப்பு போன்ற விடங்களில் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்றுதான் இந்த அரசாங்கத்தின் வெற்றிக்காக முஸ்லிம் மக்களின் வாக்குகளில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுக்கொடுத்த முஸ்லிம் காங்கிரஸை அம்பாரையில் இருந்து தூக்கி எரிவதற்காக மாகாண சபை உறுப்பினர் தயா கமகே பாரிய சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். தனது மனைவியான பிரதி அமைச்சர் அனோமா கமகேவை வைத்துக் கொண்டு முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் உள்ள புதிய கட்டிடங்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

.இதனை அறிந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கல்வி அமைச்சரை சந்தித்து முறைப்பட்டுள்ளனர். தமக்கு நடந்த அநீதிகளை விலாவாரியாக எடுத்துக்கூறியுள்ளனர். அமைச்சர் ரவுப் ஹக்கீம் தலைமையில்தான் அம்பாரை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளினதும் கட்டிடங்கள் திறக்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் முன்வைத்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரின் கோரிக்கைகளை உள்வாங்கிய கல்வி அமைச்சர் நாளை மறுதினம் 07ஆம் திகதி திறக்கப்படவிருந்த கட்டிடத் திறப்பு விழாவை உடனடியாக இடைநிறுத்துவதாகவும் பிரதி அமைச்சர் அனோமா கமகேவிடம் சொல்லிவிட்டு பிறகு ஒரு தினத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தனது அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கல்வி அமைச்சர் இவ்வாறு உத்தரவிட்ட நிலையிலும் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு திறப்பு விழா பிற்போடப்பட்ட விடயம் அறிவிக்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது. இதேவேளை திறப்பு விழா குறிப்பிட்ட திகதியில் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் தயா கமகேயின் இணைப்பாளர்கள் பாடசாலை அதிபர்களை அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாகும். ஆனால் தனி ஒரு இனவாதியான தயா கமகே இன்று முஸ்லிம் காங்கிரஸை ஆட்டிப்படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தயா கமகேவின் இவ்வாறான செயற்பாடுகள் கட்சிப் போராளிகள் மத்தியில் கடும் விசனத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுல்ல அமைச்சர் ரவுப் ஹக்கீம் மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவின் செயலை வண்மையாகக் கண்டித்துள்ளார். இன்று இருவருக்குமிடையில் பணிப்போர் ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, குறிப்பிட்ட கட்டிடத்திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெறுமாயின் அமைச்சர் ரவுப் ஹக்கீமுக்கு பாரிய தோல்வியும், அவமானமுமாகும். தயா கமகேவின் இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அமைச்சர் ஹக்கீமுக்கு ஏன் முடியாதுள்ளது என்ற கேள்வியும் எழுகின்றது.

ஒரு பட்டாளத்தை கூட்டிச் சென்றுதான் சிறிய விடயங்களைக்கூட கதைக்க முடியுமாயின் மேடையில் முழங்குகின்ற வீராப்புக்கள் எல்லாம் அரசியல் நாடகமா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.

ரவுப் ஹக்கீம் வெல்லப்போகின்றாரா? அல்லது தயா கமகே வெல்லப்போகின்றாரா? என்பதை நாளை மறுதினம் பொறுத்திருந்து பார்ப்போம்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -