நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கான நியமன விடையத்தை விரைவில் தீர்த்து வைப்பேன்-CM

2011 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியான பட்டதாரிகளுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என திருகோணமலை மாவட்ட பட்டதாரி யுவதிகள் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமதை அவரது திருகோணமலை காரியாலயத்தில் சந்தித்து தங்களின் முறைப்பாட்டினை முன்வைத்தனர்.

அவர்களுக்கான அவசர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சரால் உறுதியளிக்கப்பட்டதுடன், விடுபட்டிருக்கின்ற அனைத்து பட்டதாரிகளுக்குமான நியமனம் வழங்கும் ஏற்பாட்டையும் தான் அவசரமாக சம்மந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ளவுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹூர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், பிரத்தியேக செயலாளர் கே.பத்மநாதன் ஆகியோரும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -