தங்காலை பிரதேசத்தின் பழைய தங்காலை வீதியிலுள்ள கடற்கரைக்குச் சென்ற தாயொருவர் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளும் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தாய் உள்ளிட்ட மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
31 வயதான தாய், பத்து, ஆறு மற்றும் இரண்டரை வயதான அவரது பிள்ளைகளுமே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இவர்கள் கொழும்பில் இருந்து தங்காலைக்கு சுப நிகழ்வு ஒன்றுக்காக சென்றிருந்த குடும்பம் ஒன்றின் உறுப்பினர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ந-த்)
