மீண்டும் பந்துவீச்சு சர்ச்சையில் சுனில் நரின்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் மீண்டும் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். 

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரின், ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மாயாஜால பந்து வீச்சின் மூலம் அந்த அணியின் துருப்பு சீட்டாக விளங்கி வரும் சுனில் நரின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டியில் பந்து வீச்சு விதிமுறை மீறிய புகாருக்கு உள்ளானார். 

இதனால் அவர் உலகக் கிண்ணம் உள்ளிட்ட முக்கிய சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. இங்கிலாந்து மற்றும் சென்னையில் உள்ள பந்து வீச்சு சோதனை மையத்தில் ஆஜராகி தனது பந்து வீச்சு முறையை மாற்றி சரியானது என்று நிரூபித்த பின்னரே சுனில் நரின் இந்த ஐ.பி.எல். போட்டியில் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த புதன்கிழமை விசாகப்பட்டினத்தில் நடந்த ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது, அவரது சில பந்து வீச்சுக்கள் விதிமுறைக்கு மாறாக இருப்பதாக ஆடுகள நடுவர்கள் ரிச்சர்ட் இல்லிங்வொர்த், வினீத் குல்கர்னி ஆகியோர் புகார் செய்துள்ளனர். இந்த தகவல் இந்திய கிரிக்கெட் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘ஐ.பி.எல். போட்டி விதிமுறைப்படி தற்போது சுனில் நரின் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படுவார். அதேநேரத்தில் ஐ.சி.சி. மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரத்துடன் சென்னையில் செயல்பட்டு வரும் பந்து வீச்சு பரிசோதனை மையத்தில் அவர் பந்து வீச்சு சோதனைக்கு உட்படவும் கேட்டுக்கொள்ளப்படலாம்’ என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிமுறைப்படி சுனில் நரின் மறுபடியும் இதேபோன்று பந்து வீச்சு பிரச்சினையில் சிக்கினால் ஒரு ஆண்டு தடையை சந்திக்கவும் நேரிடலாம். இந்த ஐ.பி.எல். போட்டி தொடரில் 6 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் சுனில்நரின் 2 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -