மரண வீடுகளில் ஆபாச நடனம்: தடை செய்ய சீனா முடிவு!

தாய்வான், சீனா போன்ற நாடுகளில் இறந்தவர்களின் சடலங்களை கிடத்தி வைத்திருக்கும் வீடுகளிலும், இறுதி ஊர்வலத்தின் போதும் அரைகுறை ஆடை அணிந்த நடன அழகிகளை வைத்து ஆபாச நடனம் ஆடவைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. 

வெறும் மார்பு கச்சை மற்றும் உள்ளாடைகளை அணிந்தபடி இந்தப் பெண்கள் ஆடும் நடனத்தை பார்ப்பதற்காகவே அந்த மரண வீடுகளில் ஏராளமான கூட்டம் கூடுவதுண்டு. 

அதுமட்டுமின்றி, இதைப்போன்ற மனதுக்கு இதம் அளிக்கும் நடன நிகழ்ச்சிகளை வைத்தால் இறந்தவரின் ஆன்மாவுக்கு மோட்சம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகின்றது. இதனால், ஏராளமான பணத்தை செலவழித்து இந்த நடன அழகிகளை வைத்து மரண வீடுகளை ‘கலர்புல்லாக’ காட்ட சீனாவில் பலர் ஆசைப்படுகின்றனர். 

இதைப்போல் கடந்த மாதம் சீனாவில் ஒரு சடலத்தை சுற்றிலும் உறவினர்கள் சோகத்துடன் அழுதபடி இருக்க, கூட்டத்தை இழுக்க சவப்பெட்டியின் முன்பு நடனமாடிய ஒரு பெண், தனது உள்ளாடைகளை திடீரென கழற்றி வீசினார். இந்த காட்சி வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, அந்த நடனப் பெண்ணை அனுப்பிய குழுவின் தலைவிக்கு 15 நாள் சிறை தண்டனையும் அபராதமாக மிகப்பெரிய தொகையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, பொலிசாரை வைத்து இத்தகைய நடனங்களை தடை செய்ய சீன கலாசார அமைச்சகம் தற்போது முடிவு செய்துள்ளது.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -