குறித்த போராட்டம் நேற்று இரவும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பை மீளப் பெறும் வரை நாடாளுமன்றத்தை விட்டு செல்லப்போவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எழுத்து மூலம் உறுதி மொழி வழங்கப்படும் வரை நாடாளுமன்றில் தங்கியிருக்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இன்று மீண்டும் நாடாளுமன்றம் ஆரம்பிக்கும் வரை போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் ரோகித அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.ஹிரு
