பேரின்பரபஜா சபேஷ்-
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் நகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத்தின் தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் நகரசபை ஊழியரான அலிமுஹம்மத் பைஸல் மற்றும் சரிபுத்தம்பி புஹாரி என்ற இருவருமே தன்னைத் தாக்கியதாக ஆஸாத் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்ததற்கமைவாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினர்.
தன்னைத் தாக்கிய இருவரும் முன்னாள் ஏறாவூர் நகர பிதாவும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானாவின் தீவிர ஆதரவாளர்கள் என்று நகரசபை உறுப்பினர் அமீன் இஸ்ஸத் ஆஸாத் தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிததிருந்தார்.(ந-த்)
.jpg)