இலங்கையில் இருந்து மீட்கப்பட்ட 16 படகுகள் இராமேசுவரத்தில்!

லங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களின் 16 படகுகள் மீட்கப்பட்டு வெள்ளிக்கிழமை இராமேசுவரம் கொண்டுவரப்பட்டன. 

இராமேசுவரம் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 86 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்திருந்தது. 

இவை அனைத்தையும் விடுவிக்குமாறு இலங்கை அரசு பெப்ரவரி 26-ஆம் திகதி உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக மீட்புக் குழுவினர் மார்ச் மாதம் 34 படகுகளை மீட்டு வந்தனர். 

இந்த நிலையில், 2-ஆவது கட்டமாக இராமேசுவரம், புதுக்கோட்டை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 143 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் மீதம் உள்ள படகுகளை மீட்பதற்காக கடந்த 22-ஆம் திகதி 18 படகுகளில் இலங்கைக்கு வந்தனர். 

இவர்கள், இலங்கையில் தலைமன்னார், காரைநகர் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16 படகுகளையும், அதில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் மீட்டு இராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு கொண்டு வந்து சேர்த்தனர் என தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது. 

இலங்கை கடற்படை சிறைப்பிடித்து வைத்திருந்த தமிழக மீனவர்களின் 86 படகுகளில் இதுவரை 50 படகுகள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 36 படகுகள் மீட்க முடியாத நிலையில் இலங்கையிலேயே உள்ளன.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -