த.நவோஜ்-
அரசாங்கத்தின் நூறு நாள் விசேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்குக் கிராமம் என்ற தொனிப் பொருளில் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை வடக்கு கிராம சேகவர் பிரிவில் ஸம்ஸம் வீதிக்கு வடிகானுடனான கொங்கீற் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், அக்கிராம சேகவர் பிரிவிலுள்ள கர்ப்பினித் தாய்மாருக்கு போசாக்குணவுப் பொதி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன், பள்ளிவாயல் நிருவாகிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
சமுர்;த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்குக் கிராமம் என்ற வேலைத் திட்டத்திற்கு ஒரு திட்டத்திற்கு பத்து இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மக்களின் பங்களிப்பு இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாவுடன் ஒவ்வொரு வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுமென பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பிறைந்துரைச்சேனை வடக்கு கிராம சேகவர் பிரிவில் அறுபது கர்ப்பினித் தாய்மாருக்கு போசாக்குணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது. .jpg)
.jpg)