த.நவோஜ்-
ஆரோக்கியமான வாழ்க்கையை தூய்மையான தேசத்திலேயே உள்ளது என்ற தொனிப் பொருளிலான ஒரு நாள் வேலைத் திட்டத்தினை கல்குடா அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பு ஓட்டமாவடி பிரதேசத்தில் சனிக்கிழமை நடாத்தியது.
இதன்போது ஓட்டமாவடி பிரதேசத்தில் உடைந்து காணப்பட்ட கொங்கிறீட் வீதிகள் மற்றும் வடிகானுக்கான மூடிகள் புனரமைக்கப்பட்டதுடன், வடிகான்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு வீதியோரங்களும் சுத்தம் செய்யப்பட்டன.
அல்கிம்மா சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் ஓடடமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பவற்றின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அல்கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் சவூதி அரேபியாவுக்கான பணிப்பாளர் முதீப் தவாப் அஷ்ஷபிஈ, இலங்கைக்காக பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.எம்.எஸ்.ஹாறூன், நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.எம்.ஜாபீர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.நஜீப்கான் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)