ஏ.எஸ்.எம்.ஜாவித்-
இலங்கைக்கான ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்தின் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலைக்கழகம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து 4வது முறையாகவும் குர்ஆனிக் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று (18) கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரியில் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளரும் தூதரகத்தின் வதிவிடப் பிரதி நிதியுமான ஷெய்யத் ஹமிட் றிஷா ஹக்கிக்கி தலைமையில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சின் செயலாளர் அப்துல் மஜீத் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறுக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர், இலங்கைக்கான ஈரான் தூதரகத்தின் தூதுவர் இப்ராஹிம் ஹானி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)