த.நவோஜ்-
அரசாங்கத்தின் நூறு நாள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற தொனிப் பொருளில் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டம் நாடாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் பாடசாலை வீதிக்கு கொங்கிறீட் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை இடம் பெற்றது.
கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி..துரைராஜசிங்கம் கலந்து கொண்டு கெங்கிறீட் வீதிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற வேலைத்திட்டத்திற்கு ஒரு திட்டத்திற்கு பத்து லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மக்களின் பங்களிப்பு இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாவுடன் ஒவ்வொரு வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கிரான் பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் எஸ்.சபேஷ் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)