அனுர குமார திஸாநாயக்க ஜேர்மனுக்கு ஓட்டம்!

க்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க திடீரென கட்சியை விட்டு விலகி புதிய கட்சியொன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் ஊடகங்கள் தற்போதைய தலைவர் அனுர குமார திஸாநாயக்கவிடம் கேள்வியெழுப்ப முயற்சித்துள்ளன. 

இது தொடர்பாக கட்சி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் கட்சி தலைவர் நாட்டில் இல்லை என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க நேற்று ஜேர்மனியில் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதாகவும் அதற்காக கடந்த 14ம் திகதி நாட்டை விட்டு சென்றுள்ளதாகவும் 20ம் திகதி மீண்டும் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மன், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளில் அனுரகுமார திஸாநாயக்க கருத்தரங்குகளில் பங்கேற்க உள்ளதாக கட்சி பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -