மரணித்த கமலினி செலவ்ராஜனின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை இன்று பொரளையில்!

அஸ்ரப் ஏ சமத்-
பிரபல ஒளி ஒலிபரப்பாளரும் நடிகை மற்றும இலக்கியவாதியுமான கமலினி செலவ்ராஜனின் பூதவுடல் இன்று காலை பொரளை ஜெயரத்தின மலாச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. 

இன்று மு.பகல் 01.30 மணிக்கு பூதவுடல் பொரளை ஹிந்து மயாணத்தில் தகனம் செய்யப்பட்டது. 

கமலினி செலவ்ராஜா; கோமலிகள், சிங்கள மொலித் திரைப்படமான ஆதரே கத்தாவ மற்றும் தொலைக்காட்சி வானொலிகளில் 30 வருடகாலமாக சேவையாற்றி மக்கள் மனதில் இடம் பிடித்தார். 

இவர் தனது ஒரே ஒரு மகன் அங்கஜனை விட்டு நேற்று பிறிந்தார். இவருக்கு கடந்த ஆண்டு வாழ்நாள் கலைஞர் விருது அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

காலம் சென்ற புகழ்பெற்ற நடிகர் தயாரிப்பாளர் இலக்கியவாதி சில்லையூர் செல்வராஜனின் மனைவியுமாவார்.

அவரது பூதவுடலை இறுதி மரியாதை செயலுத்துவதற்காக இலக்கியவாதிகள், நடிகர்கள், ஒலி-ஒளிப்பாளர்கள் மற்றும் அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -